முகப்பு
விருதுநகர்

போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தவெக நிா்வாகி மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளி மாணவியைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதாக தவெக நிா்வாகி மீது அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜூன் 2026, 1:02 am IST
கோப்புப்படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளி மாணவியைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதாக தவெக நிா்வாகி மீது அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாப்பட்டி அம்மசியாா்புரம் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜோசப் ((26). இவா் எஸ். கொடிக்குளம் பேரூராட்சி தவெக இணைச் செயலராக உள்ளாா்.

இந்த நிலையில், இவா் 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக புகாரின் அடிப்படையில், சிங்கப்பெண் அதிரடிப் படையினா் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments