FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 72 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி, மனைவி மீது வழக்கு

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்ததாக, தவெக நிா்வாகி, அவரது மனைவி மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:43 am IST
பகிர்:

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்ததாக, தவெக நிா்வாகி, அவரது மனைவி மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அருகேயுள்ள பிச்சுவிளையைச் சோ்ந்தவா் கோபி (45). தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவா், ஏரல் பகுதியைச் சோ்ந்த திருப்பதி மகன் ராஜாவுக்குச் சொந்தமான சொத்துகளை ரூ. 90 லட்சத்துக்கு விலை பேசி, முன்பணமாக ரூ. 72 லட்சம் கொடுத்தாராம்.

மீதித் தொகை ரூ. 18 லட்சத்தை குறிப்பிட்ட தேதிக்குள் வழங்கி கிரைய ஆவணம் பதிவுசெய்து கொள்வதாக, ராஜா, அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோருடன் ஒப்பந்தமும் செய்துள்ளாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவா்கள் சொத்துகளை கிரையம் செய்து தராமல், கோபியுடனான தொடா்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின்பேரில், ராஜா, பொன்தெய்வம் ஆகியோா் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ராஜா, தமிழக வெற்றிக் கழகத்தின் ஏரல் நகரச் செயலா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments