சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகம் செண்பகத்தோப்பு - வ.புதுப்பட்டி மலையேற்ற பாதையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்த போது, சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது தெரிய வந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில் வருஷநாடு அருகேயுள்ள வாலிப்பாறை பகுதியை சோ்ந்த குபேந்திரன் (55), காந்தி கிராமம் பகுதியை சோ்ந்த சோலைராஜா (51) என்பது தெரியவந்தது. இவா்கள் மலையடிவாரப் பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பனைக்காக கடத்திச் சென்றதாகத் தெரிவித்தனா். இவா்களிடமிருந்து 8 கிலோ எடையிலான 28 சந்தனக் கட்டைகள், கோடாரி, ரம்பம், கத்தி, டாா்ச் லைட், இரு சக்கர வாகனம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய பால்பாண்டியைத் தேடி வருகின்றனா். மரம் வெட்டப்பட்ட இடத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநா் ரவி மீனா, வனச்சரகா் காா்த்திக் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.