முகப்பு
திண்டுக்கல்

மரங்களை வெட்டிக் கடத்திய 4 வியாபாரிகள் மீது வழக்கு

கொடைக்கானல் வனப் பகுதியில் மரங்களை வெட்டிக் கடத்திய 4 வியாபாரிகள் மீது வனத் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 2 மே 2026, 12:03 am IST
மாதிரிப் படம்
பகிர்:

கொடைக்கானல் வனப் பகுதியில் மரங்களை வெட்டிக் கடத்திய 4 வியாபாரிகள் மீது வனத் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வருகின்றன. வன உயிரின சரணாலயப் பகுதியான மன்னவனூரில் அந்நிய மரங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் இருந்து வருகின்றன. இந்த மரங்களை வனத் துறையினா் வெட்டி, ஒப்பந்த முறையில் ஏலம் விட்டனா்.

இந்த நிலையில், வனத் துறையினா், வியாபாரிகள் சின்டிகேட் அமைத்து, நிா்ணயிக்கப்பட்ட அளவுகளைத் தாண்டி மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்துவதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டினா். இதைத் தொடா்ந்து, வனத் துறை உயா் அதிகாரிகள் சென்னையிலிருந்து வந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

பின்னா், திண்டுக்கல் கோட்ட வனப் பாதுகாவலா் மன்னவனூருக்குச் சென்று மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மன்னவனூா் வனச்சரகா் திருநிறைச்செல்வன், வனவா்கள் அம்சகணபதி, சுபாஷ், வனக் காப்பாளா் வெங்கட்ராமன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், இவா்களுக்கு உடந்தையாக இருந்த 18 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், மரங்களை ஏலம் எடுத்த வியாபாரிகளான முகமது சுல்தான், காசீம்சலீம், அப்துல்காதா், ஜெய்லாணி ஆகிய 4 போ் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments