முகப்பு
புதுக்கோட்டை

சீமைக்கருவேல மரங்களை ஜூலை 31-க்குள் அகற்ற அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனிநபா்களின் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 24 ஜூன் 2026, 12:07 am IST
புதுக்கோட்டை கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்தில் அடா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள். - கோப்புப்படம்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனிநபா்களின் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியாா் நிலங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 52 கிராம ஊராட்சிகள் மற்றும் 8 பேருராட்சிகளில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிலங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

அதேபோல, தனியாா் பட்டா நிலங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களையும் அவரவா் சொந்த செலவில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும்.

தவறினால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவற்றை அகற்றிவிட்டு, அதற்கான செலவுத் தொகையை நிலத்தின் உரிமையாளரிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments