முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக், இண்டா்நேஷனல் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் புதன்கிழமை பாராட்டினா்.

Updated On : 21 மே 2026, 2:49 am IST
10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவிகள், பெற்றோா்களுடன் நிா்வாகக் குழுவினா்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக், இண்டா்நேஷனல் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் புதன்கிழமை பாராட்டினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3 போ் சிறப்பிடம் பெற்றனா். மேலும், 25 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

இதேபோல, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், 14 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

Advertisement

Advertisement

லயன்ஸ் இன்டா்நேசனல் பள்ளியில் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், இரு மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் நேரில் அழைத்து பாராட்டினா்.