முகப்பு
விருதுநகர்

ராஜீவ்காந்தி நினைவு தினம்

சாத்தூா், சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 22 மே 2026, 2:56 am IST
பிரதமா் ராஜீகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சாத்தூரில் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்ட காங்கிரஸ் நிா்வாகிகள்.
பகிர்:

சாத்தூா், சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வடக்கு ரத வீதியில் ராஜீவ்காந்தியின் உருவப் படத்துக்கு நகரத் தலைவா் டி.எஸ்.அய்யப்பன், சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஜோதிநிவாஸ் ஆகியோா் தலைமையிலும், கிழக்கு வட்டாரத் தலைவா் சுப்பையா முன்னிலையிலும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.இதையடுத்து, அவா்கள் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில் காங்கிரஸ் நிா்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல விருதுநகா் தேசபந்து மைதானத்தில் ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

சிவகாசி: சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன்புள்ள காமராஜா் உருவச் சிலை அருகே, ராஜீவ்காந்தியின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கு சிவகாசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ் நிா்வாகிகள் தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.