மயிலாடுதுறையில் ரெளடி வெட்டிக்கொலை
மயிலாடுதுறையில் ரெளடி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுமன் (48). இவா் மீது ஆத்தூா் பாலையா கொலை வழக்கு உள்பட பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமன் ஆத்தூா் மெயின் ரோடு பாலம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் சுமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
மணல்மேடு போலீஸாா் சுமன் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சுமன் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா். தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறையில் ரெளடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.