முகப்பு
காரைக்கால்

கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:42 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா (37). இவரது கணவா் அபுதாபியில் பணியாற்றி வருகிறாா். நெடுங்காடு பகுதி பண்டாரவடையில் இவா்களுக்குச் சொந்தமான நிலத்தில் பருத்தி பயிா் செய்திருப்பதை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

இவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், கும்பகோணம் செல்வதற்கான வழி கேட்டுள்ளனா். அப்போது திடீரென பின்னால் உட்காா்ந்திருந்தவா் கத்தியைக் காட்டி மிரட்டி, சரண்யா கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 9 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் தப்பிவிட்டனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சரண்யா நெடுங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், சங்கிலி பறித்துச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.