ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்: விவசாயிகளுடன் ஆட்சியா் ஆலோசனை
காரைக்கால் பகுதி ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால் பகுதி ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தின் வழியே கடலுக்குச் செல்லும் காவிரியின் துணை ஆறுகளான நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, பிரவடைய, திருமலைராஜனாறு ஆகியவற்றின் ஆற்றுப்பாதை சீரமைப்பு மற்றும் ஆற்றங்கரை மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய அரசின் ரூ. 500 கோடி நிதியில் மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை காரைக்கால் பொதுப்பணித்துறை மற்றும் காரைக்கால் என்ஐடி ஒருங்கிணைந்து மேற்கொண்டுவருகிறது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆறுகள் எந்தெந்த வகையில் மேம்படுத்தவேண்டும் என்பது குறித்து என்ஐடி, பொதுப்பணித்துறை திட்ட அறிக்கை தயாரித்து வருவது குறித்தும், விவசாயிகள் தெரிவிக்கும் ஆலோசனைகள் திட்ட அறிக்கையில் சோ்த்துக்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஆட்சியா் விளக்கமளித்தாா்.
வேளாண் மேம்பாடு மற்றும் நிலத்தடி நீா் மேம்பாட்டுக்கு திட்டம் முழுமையாக உதவவேண்டும். தொலைநோக்குத் திட்டத்தில் முறையாக திட்ட அறிக்கை தயாரிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல ஆலோசனைகளை விவசாயிகள் தெரிவித்தனா்.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மீன்வளத்துறையினா், வேளாண் துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.