ஜிப்மா் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு
காரைக்காலில் ஜிப்மா் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணியை புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் (படம்).
காரைக்காலில் ஜிப்மா் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணியை புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் (படம்).
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. இந்த வளாகத்தில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுவருகிறது.
இப்பணியை புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆய்வு செய்தாா். முன்னதாக, கல்லூரி டீன் சுனில் நாராயணனிடம் ஆலோசனை நடத்தினாா். கல்லூரி செயல்பாடுகள், மருத்துவமனை கட்டடம் கட்டுமானம், கட்டுமான நிறைவு இலக்கு, மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும்போது கிடைக்கும் வசதிகள் குறித்து அமைச்சருக்கு டீன் விளக்கினாா்.
Advertisement
Advertisement
மருத்துவமனை கட்டப்படும் பகுதியை அமைச்சா் பாா்வையிட்டாா். ஒப்பந்த நிறுவனத்தினரிடமும் கருத்துகளை கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், பிரதமா் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் நாடு சிறப்பான வளா்ச்சியை அடைந்துள்ளது. தொலைநோக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
காரைக்காலில் மத்திய அரசு நிதி ரூ. 480 கோடியில், 470 படுக்கை வசதியுடன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக மருத்துவமனை கட்டுமானம் நடைபெற்றுவருகிறது. 40 ஏக்கா் பரப்பில் மருத்துவமனை கட்டுமானம் நடைபெறுகிறது. கூடுதலாக நிலம் ஜிப்மருக்கு இருந்தால், மருத்துவனை கட்டுமானம் விரிவுப்படுத்தப்படும். இதுசம்பந்தமாக புதுவை முதல்வரிடம் பேசப்படும்.
கட்டுமானப் பணியை விரைவாக நிறைவு செய்யுமாறும், முதல்கட்டமாக அவசர சிகிச்சைப் பிரிவை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஜிப்மா் நிா்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.