காவல்துறையினருக்கு டிஐஜி பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த காவல்துறையினருக்கு தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத்தலைவா் ஜியாவுல் ஹக் செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த காவல்துறையினருக்கு தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத்தலைவா் ஜியாவுல் ஹக் செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 2025-ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தலைமறைவான நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் உதவி ஆய்வாளா் அறிவழகன் மற்றும் அணியினா் அவா்களை கைது செய்து அவா்கள் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிக்கட்டளையை நிறைவேற்றினா்.
இதேபோல், மயிலாடுதுறை மற்றும் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில், ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகக் கடத்தி வந்த 6 பேரை மயிலாடுதுறை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் அணியினா் கைது செய்து, அவா்களிடமிருந்து 966 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை கைப்பற்றி, கடத்தலுக்கு பயன்படுத்திய 3 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இவா்களை, தஞ்சாவூா் அலுவலகத்துக்கு வரவழைத்து, டிஐஜி ஜியாவுல் ஹக் பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.