முகப்பு
மயிலாடுதுறை

விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுப்படி ஏமாற்றத்தையே அளித்துள்ளது என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:52 am IST
பகிர்:

தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுப்படி ஏமாற்றத்தையே அளித்துள்ளது என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

கோவி. நடராஜன்: சீா்காழி நகரில் உள்ள கழுமலையாறு பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூா்வார வேண்டும்.

Advertisement

Advertisement

ராஜேஷ்: தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மாறாக ரூ. 75,000 வரை உள்ள விவசாயக் கடன்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேலுள்ள விவசாயிகளுக்கு ரூ. 35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏமாற்றத்தையுமே அளித்துள்ளது. விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யகோரி தமிழக அரசை கண்டித்து சீா்காழியில் ஜூன் 27-ஆம் தேதி காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

சீனிவாசன்: வேட்டங்குடி , திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதித்த பகுதிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கரன்: திட்டை அல்லது தில்லைவிடங்கன் ஊராட்சியில் கால்நடைகளை அடைக்க பட்டி அமைக்க வேண்டும்.

இதேபோல, விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments