முகப்பு
நாகப்பட்டினம்

ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு அழைப்பு

சீர்காழி வட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:47 am IST
பகிர்:

சீர்காழி வட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சீர்காழி கருவூல உதவி அலுவலர் மணிவண்ணன்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்கு ஏப்ரல் முதல் வேலை நாளில் இருந்து, ஜூன் மாதம் வரை வரலாம். நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதியர்கள் தங்களது வீட்டு முகவரி, ஆதார் எண், செல்லிடப்பேசி எண், நிரந்தர கணக்கு அட்டை எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஓய்வு பெற்றபோது தாம் வகித்த பதவியின் ஆதாரம் ஆகியவற்றை  சீர்காழி, தென்பாதி, எண். 45, வி.என்.எஸ். நகரில் செயல்பட்டு வரும் சார்நிலைக் கருவூல அலுவலகத்துக்கு கொண்டு 
வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments