முகப்பு
நாகப்பட்டினம்

கடத்தல் சாராயம், கார் பறிமுதல்: பெண் உள்பட மூவர் கைது

சீர்காழியில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 350 லிட்டர் சாராயம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:51 am IST
பகிர்:

சீர்காழியில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 350 லிட்டர் சாராயம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் புதுச்சேரி மாநிலச் சாராயம் சட்ட விரோதமாகக் கடத்தி விற்கப்படுவதாக கிடைத்தத் தகவலின்பேரில், மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், தனிப்படைக் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் வருஷபத்து கிராமத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சீர்காழியிலிருந்து வேகமாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்ததில், 10 கேன்களில் 350 லிட்டர் புதுச்சேரி மாநிலச் சாராயம் இருந்தது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீஸார், காரில் வந்த சீர்காழி ஞானசம்பந்தர் தெருவைச் சேர்ந்த குமார் (42), மங்கைமடம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்(39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், ஓதவந்தான்குடி கிராமம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த குணசுந்தரிக்கு (36) சாராயத்தைக் கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து, குணசுந்தரியை கைது செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தியக் காரையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments