கூட்டுறவு சங்கம் மூலம் காப்பீட்டுத் தொகை அளிப்பு
வேதாரண்யம் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுகாதாரத் துறையில் பணியாற்றி காலமான பணியாளர்
வேதாரண்யம் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுகாதாரத் துறையில் பணியாற்றி காலமான பணியாளர் ஒருவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் காப்பீட்டுத் தொகையாக திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப் பணியாளராக பணியாற்றிய கு. கந்தசாமி அண்மையில் காலமானார். இவர், உறுப்பினாரக அங்கம் வகித்து வந்த வேதாரண்யம் வட்ட அரசுப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் மூலம் நிர்வகிக்கப்பட்ட எஸ்.பி.ஐ ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை இறந்தவரின் மகன் கே. சுகுமாறனிடம் கூட்டுறவு சங்கத் தலைவர் நா. வேதமூர்த்தி வழங்கினார். அப்போது, துணைத் தலைவர் ஆர். வைத்தியநாதன், செயலாளர் தி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.