முகப்பு
நாகப்பட்டினம்

டிச. 27-இல் சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பான நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில்

Updated On : 25 டிசம்பர் 2018, 8:43 am IST
பகிர்:

சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பான நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் டிச. 27-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து  நீக்கும் வகையில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் டிச. 27- ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு முகவர்கள், நுகர்வோர் அமைப்பினரைக் கொண்டு நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் பங்கேற்று, எரிவாயு உருளைகள் நுகர்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீர்வு  பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments