புயலால் பாதிக்கப்பட்ட பேருந்து பணிமனைகளை சீரமைக்கக் கோரிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளை சீரமைக்க வேண்டும் என தமிழக
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளை சீரமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் (ஏஐடியுசி) மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமணன் கோரிக்கை
விடுத்தார்.
நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி,கீழையூர், விழுந்தமாவடி உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்களுக்கு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இதில், ஜெ.லெட்சுமணன் பங்கேற்று, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். பின்னர், அவர் கூறியது:
புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை. கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள் புயல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளன. இதனால், தொழில்நுட்பப் பணியாளர்களின் பணிகள் பாதிப்படைந்துள்ளன. எனவே, இந்த பணிமனைகளை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள விடுப்பு ஊதியத் தொகையில் பாதித் தொகையை புயல் பாதித்த மாவட்டங்களில் பணிபுரியும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன மத்திய சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.பாஸ்கரன், துணைப் பொதுச் செயலாளர் நடேச.கோபிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.