குதம்பை சித்தர் குருபூஜை விழா
மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயிலில், குதம்பை சித்தரின் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயிலில், குதம்பை சித்தரின் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயில், 18 சித்தர்களில் ஒருவரான குதம்பை சித்தர் ஐக்கியமாகிய தலம் என போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், குதம்பை சித்தர் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான இந்நிகழ்ச்சியை முன்னிடடு, குதம்பை சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகாபிஷேகம் நடைபெற்றது.
குருபூஜை விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக குதம்பை சித்தர் அருட்கண்ணிப் பாடல்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் வை. அம்பிகாபதி நூலை வெளியிட, அதை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், விஷ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குதம்பை சித்தர் வார வழிபாட்டு மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.