குரவலூர் உக்கிர நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு
திருவெண்காடு அருகேயுள்ள குரவலூர் உக்கிர நரசிம்மர் கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவெண்காடு அருகேயுள்ள குரவலூர் உக்கிர நரசிம்மர் கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பஞ்ச (ஐந்து) நரசிம்மர் கோயில்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயில் அமைந்துள்ள குரவலூர் கிராமத்தில்தான் திருமங்கை ஆழ்வார் சுவாதி நட்சத்திர நாளில் பிறந்து, அரசாட்சி செய்ததாக புராண வரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற குரவலூர் உக்கிரநரசிம்மர் கோயிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தையொட்டி இளநீர், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் உக்கிரநரசிம்மருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் கோயில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பார்த்தசாரதி, கோயில் அர்ச்சகர் ராஜேந்திரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.