சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை விழா
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில், ஆடி சுவாதி நட்சத்திரத்தையொட்டி, சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில், ஆடி சுவாதி நட்சத்திரத்தையொட்டி, சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
இங்கு ஆடி சுவாதி நட்சத்திரத்தையொட்டி, சுந்தரமூர்த்திசுவாமிகள் ஐக்கியமான குருபூஜை விழா நடைபெற்றது. முன்னதாக, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.