முகப்பு
நாகப்பட்டினம்

தீபாவளி விற்பனை: நாகை கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி,  புத்தாடைகள் மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக அதிகமானவர்கள்

Updated On : 5 நவம்பர் 2018, 8:08 am IST
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி,  புத்தாடைகள் மற்றும் பொருள்கள் வாங்குவதற்காக அதிகமானவர்கள் வந்திருந்ததால் ஞாயிற்றுக்கிழமை நாகையில் முக்கிய வீதிகள் மற்றும் மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் நிரம்பியது. 
நாளை (செவ்வாய்க்கிழமை) தீபாவளியை கொண்டாட மக்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக புத்தாடைகள்,  பட்டாசுகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பூ, பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக அதிகமான மக்கள் நாகையில் கூடினர். விழாவையொட்டி, நீலாதெற்குவீதி, கீழவீதி, கடைத் தெரு உள்ளிட்ட நாகையில் முக்கிய வீதிகளில் துணிகள், காலணிகள், பெண்கள் பயன்படுத்தும் பேன்ஸி பொருள்கள் தரைக்கடையாக அமைக்கப்பட்டிருந்தன. தவிர, துணிக் கடைகள், ஆயத்த ஆடை நிறுவனங்களும் புதுப்புது வகையான துணி வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். அந்த, இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. 
கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த மற்றும் மிதமான நிலையில் மழை பெய்தது. இதனால், மக்களின் போக்குவரத்து சுணங்கியதால் தீபாவளி பொருள்கள் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால், வியாரிகள் கவலையடைந்தனர். 
இதற்கிடையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பருவமழை சற்று ஓய்ந்திருந்ததால் வழக்கமான விற்பனை, மக்கள் கூட்டம் தொடங்கியது. இதனால், தீபாவளி விற்பனை நாகையில் முக்கிய வீதிகளில் களைக்கட்டியது. 
ஞாயிற்றுக்கிழமை நாகையில் மழைப் பொழிவு இல்லாதிருந்த நிலையில் தரைக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்களிலும், காலை முதல் இரவு வரை வியாபாரம் சூடுபிடித்தது என்று வணிகர்கள்தெரிவித்தனர்.
பாதுகாப்புப் பணியில் போலீஸார்: நதீபாவளி பொருள்கள் விற்பனை இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் சில வீதிகளில் இருசக்கர வாகனத்துக்கு மட்டும் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. கார் மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. நகரின் முக்கிய வீதிகள், வணிக நிறுவனங்கள்அதிகம் உள்ள இடங்கள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அசம்பாவித நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒலிப் பொருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments