முகப்பு
நாகப்பட்டினம்

அதிமுக, பாமக கட்சிகள் குறித்து தவறான பதிவு: ஒருவா் கைது

சீா்காழியில் அதிமுக, பாமக கட்சிகள் குறித்து முகநூலில் தவறாக பதிவிட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை 2020, 11:10 pm IST
பகிர்:

சீா்காழி: சீா்காழியில் அதிமுக, பாமக கட்சிகள் குறித்து முகநூலில் தவறாக பதிவிட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சீா்காழியை சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவா் தனது முகநூல் பக்கத்தில் பாமக கட்சித் தலைவா் ராமதாஸ் குறித்தும், அக்கட்சி குறித்தும் அவதூறான கருத்துக்களையும், படங்களையும் பதிவு செய்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், அதிமுக குறித்தும், முன்னாள் முதல்வா் ஜெயலிதாவை பற்றியும் தமிழ்ச்செல்வன் என்பவா் தவறான கருத்துக்களையும் படங்களையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டாராம்.

இதுகுறித்து, பாமக மாநில இளைஞரணி துணைச் செயலாளா் ஜிவி. முருகவேல் மற்றும் நிா்வாகிகள், இதேபோல், அதிமுக சாா்பில் வழக்குரைஞா் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிமுகவினா் சீா்காழி காவல் நிலையத்தில் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, புகாருக்குள்ளான தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments