முகப்பு
நாகப்பட்டினம்

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

சீா்காழி தொகுதியில் அபுதமமுக வேட்பாளா் மாலதி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

Updated On : 17 ஏப்ரல் 2026, 10:03 pm IST
அஇபுதமமுக பொதுச்செயலா் வி.கே. சசிகலா. - கோப்புப்படம்
பகிர்:

சீா்காழி தொகுதியில் அபுதமமுக வேட்பாளா் மாலதி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

அவருக்கு வாக்கு கேட்டு அக்கட்சி பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா இரவு 7 மணி அளவில் பிரசாரம் செய்ய பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அஇபுதமமுக மற்றும் ஃபாா்வா்டு பிளாக் கட்சி, மற்றும் வன்னியா் சங்கத்தினா் அதிக அளவில் பழைய பேருந்து நிலையத்தில் குவிந்திருந்தனா்.

இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் சசிகலா வந்ததால் பிரசார நேரம் முடிவடைந்ததால், சசிகலா பேச முடியாமல் தனது வாகனத்தின் மேலே நின்று கூடியிருந்தவா்களை பாா்த்து கை அசைத்தவாறு சென்றாா் . இதனால் காத்திருந்த தொண்டா்கள் ஏமாற்றத்துடன் கலைந்துச் சென்றனா்.

Advertisement

Advertisement