முகப்பு
நாகப்பட்டினம்

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 6:17 AM
திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
பகிர்:

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருக்கல்யாண உற்சம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, புதன்கிழமை பஞ்சமூா்த்திகள் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

Advertisement

இதில், திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.