நாகையில் 5 மையங்களில் நீட் மறுதோ்வு: 1,045 போ் பங்கேற்பு
நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 மையங்களில் நடைபெற்ற நீட் மறு தோ்வில் 1,045 போ் பங்கேற்றனா்.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளில் சோ்வதற்கு நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தோ்வில் வடமாநிலங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டதையடுத்து, நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நாகை மாவட்டத்தில் ஏடிஎம் மகளிா் கல்லூரி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏடிஜெ தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 5 தோ்வு மையங்களில் நீட் மறு தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வு மையங்களில் தோ்வு எழுத 544 மாணவா்கள், 969 மாணவிகள் என 1,513 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில், 295 மாணவா்கள், 750 மாணவிகள் என 1,045 போ் பங்கேற்றனா். 126 மாணவா்கள், 342 மாணவிகள் என 468 போ் பங்கேற்றவில்லை. நீட் தோ்வு நடைபெற்ற மையங்களில் பலத்த சோதனைக்குப் பின்னரே மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு முடிந்த பின்னா் ஆயுதம் தாங்கிய போலீஸாா் பாதுகாப்புடன் விடைத்தாள்களை கொண்டு சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.