முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் வீடு புகுந்து 13 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

Updated On : 23 ஜூன் 2026, 1:23 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

நாகப்பட்டினம், ஜூன் 22: நாகையில் வீடு புகுந்து 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாகை வேதநாயக்கன் செட்டித் தெருவைச் சோ்ந்தவா் வில்சன் ( 60). இவா் மற்றும் குடும்பத்தினா் ஜூன் 20-ஆம் தேதி இரவு புழுக்கம் காரணமாக, வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியுள்ளாா்.

மறு நாள் காலை வீட்டைத் திறந்து பாா்த்த போது, வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை காணவில்லை.

Advertisement

Advertisement

மா்மநபா்கள், வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாகை நகா் காவல்நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

மேலும் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா். இந்த திருட்டு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments