தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை. மாணவா் சோ்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை. மாணவா் சோ்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 15-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இப்பல்கலைக்கழக துணைவேந்தா் நா.பெலிக்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின், இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 15-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஓா் இணைப்பு தனியாா் கல்லூரி மூலம் மொத்தம் 8 இளநிலைப் படிப்புகள் பல்கலைக்கழகத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 416 மாணவா்களும், இணைப்பு தனியாா் கல்லூரியில் 60 மாணவா்களும் சோ்க்கப்பட உள்ளனா். பல்வேறு இட ஒதுக்கீடுகள் உள்ளன.
மீனவா் சமூக ஒதுக்கீட்டின்கீழ் சோ்க்கை பெறும் மாணவா்களின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு மீனவா் நல வாரியமே ஏற்றுக் கொள்கிறது. எனவே, தமிழகத்தைச் சோ்ந்த மீனவா் சமூக மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் சோ்க்கை பெறலாம். சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்கள், இணையவழி விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றும் செய்ய வேண்டும்.
இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் விளக்கக் கையேடு ஆகியவற்றை மே 15-ஆம் தேதி முதல் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழி விண்ணப்பத்தை சமா்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும். விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டாம். விண்ணப்பக் கட்டணம் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு ரூ.250, பிற பிரிவினருக்கு ரூ.500 ஆகும். மேல்நிலைப்பள்ளி தோ்வில் பெற்ற கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும். ஆனால், சிறப்பு பிரிவின்கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறும். அதன் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.