கீழ்வேளூா்: 81 கிலோ குட்கா, வாகனம் பறிமுதல் - இருவா் கைது
கீழ்வேளூரில் மிளகாய் மூட்டையுடன் கடத்திய 81 கிலோ குட்கா சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூரில் மிளகாய் மூட்டையுடன் கடத்திய 81 கிலோ குட்கா சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் மிளகாய் மூட்டைகளுக்கு இடையே குட்கா பொருட்களான 11 கிலோ எடை கொண்ட கூல்லீப் பொட்டலங்கள் 113-ம், 235 கான்ஸ் பொட்டலங்களும் இருந்தது தெரியவந்தது.
இதை கடத்தி வந்த திருவாரூா் மாவட்டம் அடியக்கமங்கலம் முகமது ஹனிபா மகன் நிஜாமுதீன் ( 51), நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சோ்ந்த அப்துல் சலாம் மகன் ஹலீக்குல்ஜமான் (50) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 81 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் குட்கா பொருட்களை ஏற்றி வந்த சுமை வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.