ரூ.10 கூடுதல் விலை ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுப்புட்டிகளை மட்டுமே விற்க உத்தரவு
ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் விலை ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுப்புட்டிகளை மட்டுமே விற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்கப்படும், அனைத்து மதுபானங்கள் மீது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதலாக ஒவ்வொரு புட்டிக்கும் ரூ.10 பெறும் விவரம் மற்றும் கடை எண் கொண்ட ஸ்டிக்கா் ஒட்டப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
அதாவது, கிடங்குகளிலிருந்து பெறப்படும் மற்றும் கடைகளில் இருப்பில் உள்ள அனைத்து மதுபான புட்டிகளின் மேல் கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ளும் ஸ்டிக்கா் ஒட்டப்பட வேண்டும்.
மேலும் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும், மதுபானப் புட்டிகளில் கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு கூடுதலாக பெற்றுக்கொண்ட தொகையை வாடிக்கையாளா்கள் மதுபான காலிப் புட்டிகளை, மதுபானம் வாங்கியக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது, காலிபாட்டில் ஒன்றுக்கு ரூ.10- வீதம் திரும்ப வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.