அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை
குடவாசல் வட்டம், சேங்காலிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு தினமும் காலை 10 மணியளவில் சிற்றுண்டி
குடவாசல் வட்டம், சேங்காலிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு தினமும் காலை 10 மணியளவில் சிற்றுண்டி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அதன்படி, சத்யசாய் அண்ணபூர்ணா அறக்கட்டளை மூலம் பள்ளியில் பயிலும் 160 மாணவர்களுக்கும் வழங்கும் விழாவை
குடவாசல் ஒன்றியத் தொடக்கக் கல்வி அலுவலர் இளங்கோவன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலா ஆகியோர் இதை தொடங்கி வைத்தனர்.
விழாவில் பேசிய தொடக்கக் கல்வி அலுவலர் இளங்கோவன், இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் மாணவர்களின் ஆரோக்கியம் மேம்பட உதவும். மாணவர்கள் பள்ளி படிப்பு மட்டுமல்லாமல் தங்களது உடல்நிலை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளில் இத்திட்டம் உதவும். சத்திய சாய் அண்ணபூர்ணா அறக்கட்டளை மூலம் தினமும் 800 ரூபாய் மூலம் சிற்றுண்டி வழங்கப்படுகிறது என்றார்.
விழாவில், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜன், துணைத் தலைவர் அம்பிகாபதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெகுபதி, ஆசிரியர் பயிற்றுநர் பழனியப்பன், மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி, ஆசிரியைகள் இந்துமதி, கனிமொழி, வினோதா, சிவசங்கரி, சத்திய சாய் அண்ணபூர்ணா அறக்கட்டளையைச் சேர்ந்த சொக்கலிங்கம், சத்துணவு அமைப்பாளர் சண்முகவடிவேல், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா நன்றி கூறினார்.