ராபியம்மாள் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா
திருவாரூரில் உள்ள ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியின் கணிதத் துறை சார்பில் கணித மேதை
திருவாரூரில் உள்ள ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியின் கணிதத் துறை சார்பில் கணித மேதை சீனிவாச இராமானுஜத்தின் 131- ஆவது பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி அறங்காவலர் குழு உறுப்பினர் பெரோஷா தலைமை வகித்து, கணிதத்தின் மேன்மை குறித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி வாழ்த்திப் பேசினார். கல்லூரி அறங்காவலர் குழு உறுப்பினர் பெஜிலா பெரோஸ், கணிதத் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு காணொலிக் காட்சியாக திரையிடப்பட்டது. மேலும் கணிதம் சார்ந்த மெளன நாடகம், நடனம், ஓவியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.