கல்லூரியில் நேதாஜி பிறந்த நாள் விழா
திருவாரூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நேதாஜியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் மீனாட்சி தலைமை வகித்தார். இதில், துணை முதல்வர் அறிவழகன், துறைத் தலைவர்கள் விஜயராகவன், பாக்கியலெட்சுமி, வினோதா, பவுன்யா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.