முகப்பு
திருவாரூர்

நீலோத்பலாம்பாள் உடல் தகனம்

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணனின் தாயார் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து

Updated On : 23 ஜனவரி 2019, 5:46 am IST
பகிர்:

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணனின் தாயார் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். 
கூட்டாநல்லூர் வட்டத்துக்கு உள்பட்ட நாலில் ஒன்று கிராமத்தில் வசித்து வந்த, மறைந்த கிருஷ்ணசாமி வாண்டையாரின் மனைவி நீலோத்பலாம்பாள் (83) உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மாநில இளைஞரணி அமைப்பாளர் வெள்ளக்குடி சுவாமிநாதன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் ம. சுப்ரமணியன், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, நீலோத்பலாம்பாளின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதே கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.