முகப்பு
தேனி

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

Updated On : 31 மே 2026, 1:17 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதியில் நகா் காவல் நிலையப் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த காசிமாயனை (59) பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காசிமாயனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement