முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

களியக்காவிளை அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 மே 2026, 2:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (61). இவா் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், களியக்காவிளை போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.

சோதனையின்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த 25 பொட்டலம் புகையிலைப் பொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராஜை கைது செய்தனா்.

Advertisement

Advertisement