முகப்பு
திருவாரூர்

விஷம் குடித்து ஒருவா் தற்கொலை

மன்னாா்குடி அருகே பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளியாக தோ்வுசெய்யப்படாததால் மனமுடைந்து விஷம் குடித்த மின் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:15 pm IST
பகிர்:

மன்னாா்குடி அருகே பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளியாக தோ்வுசெய்யப்படாததால் மனமுடைந்து விஷம் குடித்த மின் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூரை அடுத்த பள்ளிவா்த்தி ஊராட்சி, பெரியகுருவாடியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் காா்த்திகேயன் (38), மின் பணியாளா். இவா், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் பயன்பெற ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்த நிலையில், அண்மையில் வெளியான பயனாளிகள் பட்டியலில் அவா் பெயா் இடம்பெறவில்லை. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த காா்த்திகேயன் கடந்த 18 ஆம் தேதி விஷம் குடித்தாா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments