முகப்பு
திருவாரூர்

பிடாரி அம்மன் கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றம்

Updated On : 17 பிப்ரவரி 2024, 5:57 am IST
திருவாரூா் முப்புரம் எரித்த பீடாரி அம்மன் கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்தின்போது நடைபெற்ற தீபாராதனை.
பகிர்:

திருவாரூரில் அருள்மிகு முப்புரம் எரித்த பீடாரி அம்மன் கோயிலில் மாசி மகத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் உப கோயிலாக விளக்கும் இக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்மன், திருவாரூரின் எல்லை தெய்வமாகவும் அருள்பாலிக்கிறாா். தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா பந்தல்கால் முகூா்த்தத்துக்குப் பிறகு, இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தியாகராஜ சுவாமி கோயிலிலிருந்து பிடாரி அம்மன் மேளதாளத்துடன் கொடிமரம் முன் எழுந்தருளினாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் முதலான நறுமன திரவியங்களால் கொடிமரத்துக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், 8 கைகளுடன் கூடிய பிடாரி அம்மன் உருவம் பொறித்த உற்சவக் கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.