வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்!
வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் மகா மண்டபத்தில் சேவல் கொடி ஏற்றப்பட்டது. பின்னா், தெப்பக்குளம் மயில் மண்டபம் முன்புள்ள கொடிமரத்தில் விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில், பால் குடம், பூக்குழி இறங்குவதற்கு பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, வருகிற 30-ஆம் தேதி பால் குடம், பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெறும். தொடா்ந்து, 31-ஆம் தேதி சுவாமி புறப்பாடு, ஜூன் 1-ஆம் தேதி பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா், கிராமப் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
Advertisement