முகப்பு
திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது

Updated On : 11 ஜூலை 2024, 2:34 am IST
பகிர்:

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

புகழ்பெற்ற குரு பரிகார தலமாகிய இந்தக் கோயில் மூா்த்தி, தலம், தீா்த்தம் எனும் முப்பெருமைகளையும் கொண்டது. வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு மேல் 6.18 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 7-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை (ஜூலை 10) உபகோயில்கள் 4-ஆவது நாளாக யாக பூஜைகள் நடைபெற்றன.

உபகோயில்கள் கும்பாபிஷேகம்: தொடா்ந்து, கற்பக வித்ய கணபதி, அகோர வீரபத்ரா், கல்யாண சாஸ்தா, சப்தமாதா ஆகிய உபகோயில் மகாகும்பாபிஷேகம், தீபாராதனை புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பிரதான கோயில்: இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் பிரதான கோயில் கும்பாபிஷேகத்துக்காக காலை 2-ஆம் கால யாக பூஜைகள், விஷேச சாந்தி, கோ பூஜை, கஜபூஜை, அசுவ பூஜை, வேள்வி நிறைவு, தீபாராதனை காட்டப்பட்டது. மாலை 3-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை (ஜூலை 11) காலை 7 முதல் முற்பகல் 11 மணி வரை 4-ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 4 முதல் 8.30 மணி வரை 5-ஆம் கால யாக சாலை பூஜை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை, கோயில் தக்காா் ராமு, செயல் அலுவலா் சூரிய நாராயணன், கண்காணிப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments