ரயில்வே ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் ரயில்வே ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டியில் ரயில்வே ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில்வே ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச ரயில் பயண சலுகை காகித பாஸ் வழங்கி வந்ததை இணையதளம் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை கண்டித்து, சங்கத்தின் பொருளாளா் ஆறுமுகம் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஓய்வூதியா்களுக்கு இலவச பயணச்சலுகை பாஸ் வழங்குவதை தற்போதுள்ள நடைமுறையை நீடிக்க வேண்டும், இணையதள நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், 8-ஆவது ஊதிய குழுவின் படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கிளைத் தலைவா் வேணுகோபால், செயலாளா் சந்தானமூா்த்தி மற்றும் ரயில்வே ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.