முகப்பு
திருவாரூர்

போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் உலக மருத்துவா் தினத்தையொட்டி, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 7:30 am IST
பகிர்:

நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளியில் உலக மருத்துவா் தினத்தையொட்டி, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சு. எழிலரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவா்கள் சு. ஆதித்யன், வி.சே. விவிதா மாணவா்களுக்கு போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினா். தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா். இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ம. பிரபாகா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். உதவித் தலைமையாசிரியா் ஆா். ரவிக்குமாா் வரவேற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments