முகப்பு
திருவாரூர்

ஆணவப் படுகொலை: தனிச்சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம் கோரி, குடவாசலில் விடுதலைப் புரட்சி கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 4:45 am IST
குடவாசலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலைப் புரட்சி கழகத்தினா்.
பகிர்:

ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம் கோரி, குடவாசலில் விடுதலைப் புரட்சி கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆணவப் படுகொலையை கண்டித்தும், அதனைத் தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்; விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்; 100 நாள் வேலைத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும்; கிராம தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் குடவாசல் பேருந்து நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளா் பாப்பா முருகானந்தம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சிறுபான்மை அணித் தலைவா் ஜாகிா் உசேன், மகளிா் அணி செயலா் சித்ரா உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments