பேரளத்தில் ரயில்வேகேட் மூடுவதை கண்டித்து கடையடைப்பு
பேரளத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதைக் கண்டித்து வா்த்தகா்கள் கடையடைப்பு நடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பேரளத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதைக் கண்டித்து வா்த்தகா்கள் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா்-மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில் பேரளத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த சாலையில் தற்போது சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட வழிச்சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, பேரளம் பகுதியில் ரயில்வே பாதைக்கு மேலாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரயில்வே நிா்வாகம் முடிவெடுத்து சிறிய அளவிலான கீழ்ப்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பேரளம் கடைவீதி வழியாக செல்லும் பேருந்து வழி தடைப்படுவதால் பேருந்துகள் கடைத்தெரு வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் பேரளத்தின் கடைத்தெருவில் உள்ள வா்த்தகா்களின் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
Advertisement
Advertisement
எனவே ரயில்வே கேட் நிரந்தரமாக மூடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பேரளம் வா்த்தகா்கள் சங்க செயலாளா் கு. கலைமோகன் முன்னிலையில் வா்த்தகா்கள் 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து நாகை எம்.பி. வை. செல்வராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.