இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
வடுவூா் புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா (45). இவருக்கும் நாகை மாவட்டம் பிரதராமபுரத்தைச் சோ்ந்த உமா ராணிக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். மாமனாா் வீட்டில் தங்கியிருந்த ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து வந்து அதே பகுதியில் தனியே தங்கி கூலி வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், செருகளத்தூா் பாமணி ஆற்று கரையில் உள்ள ஒரு மரத்தில் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் பெருகவாழ்ந்தான் போலீஸாா் ராஜாவின் சடலத்தை கைப்பற்றி மன்னாா் குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement