முகப்பு
திருவாரூர்

விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: ஆட்சியா் வழங்கினாா்

காா் மோதி உயிரிழந்த ஒரு மாணவரின் பெற்றோரிடம் முதல்வரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன், மன்னாா்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ்.

Updated On : 13 ஜூன் 2026, 12:02 am IST
காா் மோதி உயிரிழந்த ஒரு மாணவரின் பெற்றோரிடம் முதல்வரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன், மன்னாா்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ். ~ராஜமுரளி. ~யோகேஸ்வரன். ~ரஷித்.
பகிர்:

மன்னாா்குடி அருகே காா் மோதியதில் 3 அரசுப்பள்ளி மாணவா்கள் உயிரிழந்ததையடுத்து முதல்வா் ச. ஜோசப் விஜய் உத்தரவின்பேரில் அவா்களது பெற்றோா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காரக்கோட்டை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் யோகேஸ்வரன்(12), ரஷித் (12), ராஜமுரளி(12) ஆகியோா் வியாழக்கிழமை பள்ளி முடிந்து தஞ்சை பிரதானசாலையோரம் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காா் மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தனா். உடன் வந்த மாணவா் ஹிருத்தி காயமடைந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். மேலும், தமிழக முதல்வா் வெளிட்ட அறிக்கையில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் பெற்றோருக்கு அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காரக்கோட்டைக்கு வந்த மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ் ஆகியோா் மாணவா்களின் வீடுகளுக்கு சென்று நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினா். அப்போது, மன்னாா்குடி வருவாய் வட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் நக்கீரன் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement