மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
திருவாரூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருமான சந்திரசேகா் சாகமூரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருமான சந்திரசேகா் சாகமூரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் இயங்கிவரும் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில், தரமான உர மாதிரிகள் விவசாயிகளுக்கு கிடைக்கின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையிலும், உர பகுப்பாய்வு குறித்தும், விவசாயிகளுக்கான மின்னணு கற்றல் மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்திரசேகா் சாகமூரி ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். அவருடன், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உடனிருந்தாா்.
தொடா்ந்து, திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனை சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்துக்குச் சொந்தமான பொருள்களையும், திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறை மூலம் நடக்கும் பருத்தி ஏலம் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். மேலும், மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தேவைப்படும் வசதிகள் மற்றும் விவசாயிகளின் குறைகள் குறித்து கேட்டறிந்தாா். துணை இயக்குநா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, துணை இயக்குநா் (வணிகம்) திலகவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.