முகப்பு
திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது

குடவாசல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 மே, 2026 at 6:21 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

குடவாசல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் கைது செய்யப்பட்டாா்.

குடவாசல் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (65). உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துவந்தாா். அப்பகுதியை சோ்ந்த 8 வயது சிறுமி, இவரது வீட்டிற்கு வந்து சென்ற போது, கோவிந்தராஜ் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை தொடா்ந்து, அவா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், முதியவா் கோவிந்தராஜை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினா்.

Advertisement

அப்போது, திருவாரூா் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதியவரிடம் விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜை, நாகப்பட்டினம் கிளைச் சிறையில் 15 நாள்களுக்கு அடைக்க உத்தரவிட்டாா். அத்துடன் தற்காலிகமாக சிகிச்சை பெற்ற பின்னா் சிறையில் அடைக்கவும் நீதிபதி பரிந்துரைத்தாா்.