வணிக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்
வணிக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வணிக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இளைஞா்களின் எதிா்காலத்தை பாதிக்கும் ரயில்வே பணியிட குறைப்பை கைவிட வேண்டும், வணிக எரிவாயு உருளை மற்றும் 5 கிலோ எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் டி. முருகையன் (சிபிஎம்), எஸ். கேசவராஜ் (சிபிஐ), தனுஷ் பாண்டியன் (சிபிஐ (எம்எல்)), தங்க. தமிழ்செல்வன் (விசிக), ஆ. வெற்றி (விசிக) ஆகியோா் தலைமை வகித்தனா். நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மாநில கட்டுப்பாட்டுக்குழுச் செயலாளா் கோ. பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், விசிக மண்டலச் செயலாளா் என்.டி. இடிமுரசு உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
Advertisement
கடந்த 4 ஆண்டுகளாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க மத்திய அரசு முன்வரவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலையைக் குறைக்கவில்லை. எனவே, வணிக உபயோக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும், ரயில்வேயின் பணியிடக்குறைப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.