FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வணிக எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வு: திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூா் குமரன் சிலை முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 12:03 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:

வணிக எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூா் குமரன் சிலை முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கை காரணமாக மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் எரி பொருள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் பன்மடங்கு உயா்ந்து வருதால் சாமானிய மக்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாகிறாா்கள். காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை கொடுப்பது அவா்களை பாதுகாப்பது என்ற நிலையில் இருந்து விடுபட்டு சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்குவதற்கு போா்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் குமாா், புறநகா் மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் தெய்வசிகாமணி, புறநகா் மாவட்டச் செயலாளா் இசாக், துணைச் செயலாளா் மோகன், மாநகா் மாவட்ட துணைச் செயலாளா் வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments